வணக்கம் 🙏
கடந்த இரண்டு வருடங்களாக அம்மையப்பன் தொண்டு அறக்கட்டளை திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன் பாளையம் JH நகரில் தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நமது அறக்கட்டளையின் சார்பில் அம்மையப்பன் முதியோர் இல்லம் திருவண்ணாமலை மாவட்டம் பவித்திரம் கிராமத்தில் இயற்கையான சூழ்நிலையில் செயல்பட உள்ளது. இங்கு 65 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட பெண்கள் பயனுறும் வகையில் தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ பராமரிப்பு அனைத்தும் சிறப்பான முறையில் இலவசமாக வழங்கப்பட உள்ளது என்பதை தங்களது மேலான பார்வைக்கு தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கூறிய வகையில் யாரேனும் தெரிந்த நபர்கள் இருந்தால் இங்கு தங்கி பயனைடய அவர்களுக்கு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சேர்மன்,
அம்மையப்பன் தொண்டு அறக்கட்டளை,
அம்மையப்பன் முதியோர் நலவாழ்வு இல்லம்,
பவித்திரம், திருவண்ணாமலை.
📱 : 9443091722